திங்கள், மே 29, 2017

திருகோணமலையில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்! - நான்கு பேர் கைது

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டி வைக்கப்பட்ட இளைஞர்களை பொலிஸார் மீட்டதுடன் அவர்களை கைது செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.