தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

செவ்வாய், மே 30, 2017

’’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அரசு மீது பாரதிராஜா ஆவேசம்

மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியதால் மே -17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர்கள்  பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் இன்று சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா,  ‘’தமிழர்களுக்கு வீரமும், விவேகமும் துருப்பிடித்து போய்விட்டது. தமிழ்நாட்டில் இரண்டு தலையாட்டி பொம்கைகள் இருக்கின்றனர்.   மடியில் கனம் இருப்பதால் பயப்படுகின்றனர். தமிழர்களுக்கு அந்த பயமில்லை. 

 எங்கள் மொழியிலும், எங்கள் இனத்திலும், எங்கள் குடும்பத்திலும்  நீ சரிசமமாக பங்கு கேட்காதே.   மத்திய அரசு என்ன சொல்லுதோ? தமிழக அரசே! உங்களுக்கு உணர்வு இருந்தால், மானம்..ரோசம் இருந்தால்  திருமுருகனும், அவரோடு சேர்த்து கைது செய்யப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.  இல்லையென்றால்  மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால் தமிழன் இதற்காக போராடுவான்’’ என்று தெரிவித்தார்.