தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

செவ்வாய், மே 30, 2017

பேட்டிங், பௌலிங், அணி பட்டியல்... முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா!

சர்வதேச கிரிக்கெட் கமிட்டியான ஐ.சி.சி, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்கவின் காகிசோ ரபடா முதலிடத்தைப் பிடித்துள்ளார்
. அவர் சக வீரரான இம்பரான் தாஹிரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
1998-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தக்குக்கு 22 வயதானபோது, பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிடித்தார். அதன் பிறகு இப்போதுதான் 22 வயாதாகும் கிரிக்கெட் வீரர் ஒருவர், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 
இங்கிலாந்துக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 20 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதால்தான் ரபடா, டக்கென்று டாப் ஸ்பாட்டுக்கு எகிறியுள்ளார்.