புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மே 27, 2017

தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் ஈரோஸ் நிராகரிக்கும்! - அருளர்

தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் மக்களுடன் இணைந்து ஈரோஸ் அமைப்பும் நிராகரிக்கும் என்று ஈரோஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. சிங்கள மக்களுக்கு சமஸ்டி என்றால் என்ன என்பதை தெளிவாக விளங்கப்படுத்தியிருந்தால்
அவர்கள் நிச்சயம் விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்று ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான ஏ.ஆர்.அருட்பிரகாசம் தெரிவித்தார்.ஈரோஸ் இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முற்பகல் யாழ். ஊடக அயைமத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இணைந்த வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திற்கு பூரண சுயாட்சி என்பதே தமிழ் மக்களது அபிலாசை என்று குறிப்பிட்ட அவர், இதுவே தமிழ் மக்களுடைய கோரிக்கையாக இருந்துவருகின்றது என்றும் குறிப்பிட்டார். அத்துடன் இதற்கு குறைவான எந்த தீர்வும் தமிழ் மக்களை திருப்திப்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.
கடந்த கால அரசியலமைப்புக்கள் தமிழ் மக்களால் எவ்வாறு நிராகரிக்கப்பட்டதோ அதேபோன்று தான் இதுவும் நிராகரிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அவர், தமிழ் மக்களுடைய தாயக, தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து உரிய தீர்வைக் கொண்டுவராவிட்டால் அது மக்களால் நிராகரிக்கப்படும் என்றும் அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று மக்கள் விரும்பினால் ஈரோஸ் அமைப்பும் போராடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.