புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 23, 2017

சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார்

பிரபல சாமியார் சந்திராசாமி ( வயது 69) உடல்நலக்குறைவினால் டெல்லியில் காலமானார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன், இந்த வழக்கில் சாமியார் சந்திராசாமியிடம் விசாரிக்கப்பட வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.  இதேபோல் பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்திருக்கிறது.

நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த சந்திரா சாமி, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்துள்ளார். சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து போன நிலையில், இன்று டெல்லியில் அவர் காலமானார்.