புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 24, 2017

சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி திடீர் மனு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். "25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நளினி

1991ஆம் ஆண்டு தமிழகம் வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனிடையே இவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

‘நளினி கதையைப் படமாக்கினால் ஆஸ்கர் விருதே கிடைக்கும்...!’ கண்கலங்கிய வைகோ
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, எழுதிய சுயசரிதையை திரைப்படமாக எடுத்தால், ‘ஆஸ்கர் விருது’ கிடைக்கும் என்று வைகோ உருக்கமாக கூறினார். If we make Nalini Biopic, sure it will bring Oscars : vaiko
இந்நிலையில் சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் காரணங்களுக்காகவே தான் இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதாகவும் நளினி குற்றம்சாட்டியுள்ளார்.