செவ்வாய், மே 30, 2017

வித்தியா கொலை விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் தொடங்கியது!

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெற்றது. இன்றைய முதல் அமர்வின் போது, வழக்கின் முதல் ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு ட்ரயல் அட் பார் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய மூன்று நீதிபதிகளும் இன்று முதல் தடவையாக ஒன்று கூடினர். இன்று மாலை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதான அறையில் ஒன்றுகூடிய மேற்படி மூன்று நீதிபதிகளும், குறித்த வழக்கின் முதல் ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 12ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டனர். அத்துடன் இவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரத்தை அன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிமன்றில் தாக்கல் செய்யவும் சட்டமா அதிபர் சார்பிலான சட்டவாதிகளை மன்றில் ஆஜராகுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணித்துள்ளனர்