தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மே 31, 2017

எதிரிக்கு எதிரி; நமக்கு நண்பன்!’ - சசிகலாவின் கூட்டல் கழித்தல் கணக்கு எஸ்.மகேஷ்

அ.தி.மு.க-வில், சசிகலாவின் குடும்பத்தினரை ஓரம்கட்ட முடிவுசெய்துள்ள நிலையில், 'எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்' என்ற ரீதியில் அவர்கள் குடும்பத்துக்குள் சில வாக்குறுதிகளுக்கு சசிகலா தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அணிகள் உருவாகிவருகின்றன. சசிகலா, டி.டி.வி.தினகரன் சிறைக்குச் சென்ற பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்குப் போட்டியாக, இரட்டை இலைச் சின்னத்தை மீட்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் பிரமாண உறுதிமொழிப் பத்திரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் 50 லட்சத்துக்கும் மேலான பிரமாண உறுதிப்பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், மத்திய அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்வம் காட்டிவருகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் பா.ஜ.க-வில் தங்களுக்கும் செல்வாக்கு இருப்பதை நிரூபிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. மத்திய அரசின் மாட்டிறைச்சி விவகாரத்தில்கூட எந்தவித எதிர்ப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவிக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகளால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கவனித்த சசிகலா குடும்பத்தினர், ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக, அந்த குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவின் குடும்பத்தினர், "ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அ.தி.மு.க. ராணுவக் கட்டுப்பாட்டோடுசசிகலா செயல்பட்டுவந்தது. தற்போது, 'தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்' என்பது போல அ.தி.மு.க-வில் பல அதிகார மையங்கள் உருவாகியுள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சியைப் போல கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியால்கூட கோஷ்டி அரசியலைச் சமாளிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவின் தலைமையில் செயல்படுவதாக முடிவெடுத்தவர்கள், எதிரணியில் இருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து, எங்களுக்கு எதிராகச் சிலர் செயல்படுகின்றனர். சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, துணைப் பொதுச் செயலாளர் டி.டிவி.தினகரன் மூலம் கட்சி வழிநடத்தப்பட்டது. அவரும் இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் சிறைக்குள் இருக்கிறார். சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்குள் நுழைந்தவர்கள்கூட எங்களுக்கு எதிராகச் செயல்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று எங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது, எங்களுக்குள் இருந்த சண்டையால்தான் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பது தெரியவந்தது.

இதனால், 'நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சமாளிக்கலாம்' என்று பேசி முடிவெடுத்துள்ளோம். இதுதொடர்பாக சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை சிறையில் சந்தித்துப் பேசி, ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளோம். அதாவது, இருவரும் சிறைக்குள் இருக்கும்வரை திவாகரன் மூலம் அ.தி.மு.க-வை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற முடிவுக்கு அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, எங்கள் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். அவர்களும் டபுள் ஓகே சொல்லியிருக்கின்றனர். தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்களில் எத்தனைபேர் அதிருப்தியில் உள்ளனர் என்ற கணக்கையும் எடுத்துள்ளோம். ஏற்கெனவே, கூவத்தூரில் நடந்த ஆலோசனையில், அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளோம்.

அவர்கள் எல்லோரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பினால், நிச்சயம் ஆட்சியை இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். முதல்வருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உள்ள எதிரிகள் நமக்கு நண்பன் என்ற ரீதியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, எங்கள் குடும்பத்தினரிடையே இருந்த முட்டல் மோதல், கருத்துவேறுகளைக் களைந்து, அனைவரும் ஒன்றுசேர தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை வழிவகுத்துக்கொடுத்துள்ளது. அதோடு, மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படவும் முடிவெடுத்துள்ளோம். அதற்கான முயற்சியாக, பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிமூலம் தூதுவிடப்பட்டுள்ளது. அவரும், பேசிவிட்டு முடிவைச் சொல்வதாகத் தெரிவித்துள்ளார்" என்றனர்.