புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, மே 21, 2017

புங்கை மண் பெற்ற அறிவு மங்கை
இவள் ஒரு சாதனைப்பெண் ஆம்.என் மண்ணின் சொந்தங்களே ;கடந்த மார்ச்சில் வெளிவந்த க .பொ .த. சா. தர பரீட்சை முடிவுகளில் பல்லாண்டு காலமாக யாராலும் பெற்று சாதிக்க முடியாத ஒரு அதியுயர் பெறுபேற்றினை அடைந்து வரலாறு படைத்துள்ளார்.தீவகம் போன்ற வசதிவாய்ப்புக்கள் குறைந்த பிரதேசத்தில் இருந்து வந்த ஒரு மாணவி இந்த வரலாறை எழுதுவது என்பது உச்சநிலை திறனாகும் .இந்த தெய்வ மங்கை(7A,2C )7பாடங்களில் . அதிவிசேச சித்திகளையும் 2பாடங்களில் சாதாரண சித்திகளையும் பெற்று இந்த புங்குடுதீவு மண்ணின் பெருமையை பறை சாற்றியுள்ளார் புங்குடுதீவு8 ஆம் வட்டாரம் மடத்துவெளியை சேர்ந்த கந்தப்பு யோகம்மாவின் புத்திரன் பாலசிங்கம் மற்றும்அ வரது துணைவியார் 1ஆம் வட்டாரம் திருச்செல்வம் புத்திரி வெண்ணிலா தம்பதி பெற்றெடுத்த மங்கை செல்வம் அஸ்வினா தான் இந்த அளப்பரிய சாதனை செய்து அசத்தி உள்ளார் சற்றுக் காலம் கடந்தாலும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் .புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைபரிசில் சித்தி எய்தி யாழ் வேம்படி உயர்தர பாடசாலையில் சேர்ந்து தற்போதும் உயர்தர வகுப்பில் மருத்துவ பிரிவில் கல்வியை தொடர்கிறார் எதிர்காலத்தில் எம்மண்ணுக்கு ஒரு சிறந்த உயர் மருத்துவராக வலம் வர வேண்டுமென இறைவனை இறைஞ்சி வாழ்த்துவோம் உறவுகளே இந்த பெறுபேற்றினை பெற்றமைக்காக தங்கையே உன் இருகரம் தொட்டு வணங்குகிறேன் .அத்தோடு இவருக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்களையும் வாழ்த்துகிறோம் நன்றி தயவு செய்து இந்த தகவலை பகிர்ந்து பாராட்டி எடுத்து செல்லுங்கள்