புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 30, 2017

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு யாழ்ப்பாணத்தில் இறுதி அஞ்சலி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடல் இன்று சாவகச்சேரிக்கு கொண்டு வரப்பட்டபோது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் அஞ்சலியைச் செலுத்தினர். இன்று காலை து.
கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட அமரரின் பூதவுடலை மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையிலான தென்மராட்சிப் பிரதேச மக்கள் எழுதுமட்டுவாழ் சந்தியில் பொறுப்பேற்று ஊர்வலமாகக் கொண்டு வந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடல் இன்று சாவகச்சேரிக்கு கொண்டு வரப்பட்டபோது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் அஞ்சலியைச் செலுத்தினர். இன்று காலை கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட அமரரின் பூதவுடலை மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையிலான தென்மராட்சிப் பிரதேச மக்கள் எழுதுமட்டுவாழ் சந்தியில் பொறுப்பேற்று ஊர்வலமாகக் கொண்டு வந்தனர்.

பூதவுடலுக்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய கல்விச் சமூகம், கொடிகாமம் நகரப் பகுதி வர்த்தக்கள், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி சமூகம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி சமூகம், போன்றவர்கள் பான்ட் வாத்தியத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் அன்னாரின் பூதவுடல் சாவகச்சேரி சந்தியில் வைத்து சாவகச்சேரி மக்களால் பொறுப்பேற்கப்பட்டு சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்துக்கு சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி பான்ட் வாத்திய குழுவுடன் பாடசாலை மாணவர்கள் பூதவுடலை தாங்கி வர ஏனைய மாணவர்கள் ஏ9 சாலை இருபக்கமும் நின்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மாணவர்களிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்தரன், சி.சிறிதரன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைரட்ணசிங்கம், மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ஓய்வுநிலை அதிபர் க.அஅருந்தவபாலன் ஆகியோர் பூதவுடலை பெற்று பேருந்து நிலையத்துக்கு தூக்கி வந்தனர்.

பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் பூதவுடல் வைக்கப்பட்ட போது சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றின் முன்னாள் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும், மாணவர்களும், அமரரின் சரசாலை உறவினர்களும், சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான், சட்டத்தரணிகள், பணியாளர்கள், சாவககச்சேரி கைத்தொழில் வணிகர் மன்ற வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் உட்பட பலர் நீண்ட வரிசையில் நின்று மலர் மாலைகள் அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அமரர் அ.விநாயகமூர்த்தி சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள் ஆசிரியருமாவார்.

பின்னர் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாவகச்சேரி பொன் விழா மண்டபத்துக்கு முன்பாக வைத்து வாகனத்தில் ஏற்றி வழியனுப்பி வைக்கப்பட்டது.