புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 24, 2017

இங்கிலாந்து குண்டுவெடிப்பு... மூன்று பேர் கைது

இங்கிலாந்து குண்டுவெடிப்பு... மூன்று பேர் கைதமான்செஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மூன்று பேரை இங்கிலாந்து காவல்துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

manchester

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இசைக் கச்சேரி ஒன்றில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இங்கிலாந்து குண்டுவெடிப்பின் திக் திக் நிமிடங்கள்! #EnglandExplosion
இங்கிலாந்து இசை நிகழ்ச்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் இதயத்தை நொறுக்கியுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேர் காயமடைந்துள்ளனர்... Final moments of the heart breaking
இந்நிலையில் மான்செஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என பிரிட்டன் பிரதமர் தெரெசா மே கூறியதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே லிபியாவில் இருந்து அகதியாக வந்த சல்மான் அபேதி என்பவர் இந்த குண்டு வெடிப்பில் ஈடுப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அவரது புகைப்படத்தையும் இங்கிலாந்து போலீஸார் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.