புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 30, 2017

திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவுக்கு பிடி வாரண்ட்

திருச்சி J.M.3 நீதிமன்றத்தில் சமயபுரம்,கல்பாளையத்தை சேர்ந்த நஜீர் அகமது ( திமுக புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்)  என்பவரிடம் கடன் வாங்கி  வங்கியில் பணமில்லாமல்  காசோலை  கொடுத்து மோசடி செய்ததாக
திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா சிவா மீது வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருந்து வந்தது.

  வாய்தா தேதியான இன்று  (30.5.2017 ) சூர்யா சிவா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணைக்கு  ஆஜராகாத காரணத்தினால் நீதிபதி ரெஹானா பேகம்,  சூர்யா சிவாவுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை வருகிற 13.7.2017க்கு ஒத்தி வைத்துள்ளார்.