புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 23, 2017

'உடைந்த அ.தி.மு,கவும், அரசின் மகத்தான சாதனையும்!

''அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் ஆகிவிட்டது... அதன் ஆட்சி எப்படி இருக்கிறது; அவற்றின் சாதனைகள் என்ன'' என்று அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்களோ, ''அதை ஏன் கேட்கிறீர்கள்... இப்படிப்பட்ட ஓர் அரசு இருக்கவே வேண்டியதில்லை'' என்றவர்கள், '
' 'அண்ணன் எப்போ சாவான்... திண்ணை எப்போ காலியாகும்' என்ற  பழமொழிக்கு ஏற்பதான் தற்போதைய அ.தி.மு.க ஆட்சி இருக்கிறது'' என்றனர் ஒற்றைவரியுடன். ''சற்று விரிவாகச் சொல்லுங்கள்'' எனக் கேட்டோம். அவர்கள் சொல்ல ஆரம்பித்தனர்.
சசிகலா குடும்பம்!
''கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறியது. அந்த அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் சரியாக ஒருவருடம் ஆகிவிட்டது. ஆனால், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்து இந்த ஒருவருடத்தில் தமிழகத்தில் எதையும் செய்யவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். ஜெயலலிதாவிடம் இருந்த நம்பிக்கையின்பேரில் மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினர். அவரும் பதவியேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கொடுத்த சில வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான சில கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், மிகவும் முக்கியமானது, தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்பது. அவர் சொன்னப்படியே முதற்கட்டமாகத் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில்தான் அவர் பதவியேற்று நான்கு மாதங்கள்கூட முடியாத நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், 75 நாள்கள் அங்கேயே தங்கிச் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதன்பிறகுதான் சசிகலா குடும்பம் விளையாட ஆரம்பித்தது. நாம் முன்னே சொன்ன பழமொழிக்கு ஏற்றவாறு அவர்கள் கச்சிதமாக காய் நகர்த்தினார்கள். 
ஜெயலலிதா
அனைத்திலும் அவசரம்!
ஓ.பன்னீர்செல்வத்தை 'அவசர' முதல்வராக அவர்களுடைய அவசரத்துக்குப் பயன்படுத்தினார்கள். பிறகு, காத்திருந்த கொக்குபோல் அவரை ராஜினாமா செய்யவைத்து... கட்சியும், ஆட்சியும் ஒரே குடும்பத்திடம் இருக்கும் அளவுக்குக் கட்சி நிர்வாகிகளை அடக்கி, ஆசை காட்டி வழி உண்டாக்கினார்கள். அதற்கான தண்டனையை ஆண்டவன் அப்போதே தந்துவிடச் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது. இருந்தாலும், கட்சியையும் ஆட்சியையும் தக்கவைப்பதற்காக... ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு புது பொறுப்பு கொடுத்து உள்ளே இழுத்தார் சசிகலா. அத்துடன், எடப்பாடி பழனிசாமியையும் அவசர முதல்வராகத் தேர்ந்தெடுத்தார். ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகி விடலாம் என்ற கனவில் மிதந்த டி.டி.வி.தினகரனுக்கு அது பொய்த்துப்போனது. 
டி.டி.வி.தினகரன், சசிகலா
ஓ.பி.எஸ். விலகல்!
ஒருபுறம், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததன் காரணமாக ஆர்.கே.நகர் ரத்தானது. மறுபுறம், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறத் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் டி.டி.வி.தினகரன். இதற்கெல்லாம் காரணம், ஜெயலலிதாவுக்குப் பிறகு எல்லாவற்றிலும் நாம்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்; நாம் சொல்வதே சரி; நம்மை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற அதிகாரத்தோடு சசிகலா இருந்ததுதான். இதை நன்றாகப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகினார் ஓ.பன்னீர்செல்வம். 
மகத்தான சாதனை!
அன்று, அவருடைய விலகலின் ஆரம்பப் புள்ளி இன்று அ.தி.மு.க-வின் முற்றுப்புள்ளியில் வந்து நிற்கிறது. இப்படி அந்தக் கட்சியிலேயே உட்கட்சிப் பூசல் நிலவுவதால் எப்படித் தமிழகத்தின் பிரச்னைகளைச் சமாளிக்க முடியும்? தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது; விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லை... இப்படி நாட்டில் பல பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இதுஒருபுறமிருக்க, மருத்துவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னைகளும் கடந்த சில நாள்களுக்கு முன் விஸ்வரூபமெடுத்தது. ஆனால், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத இந்த அரசு தற்போது உடைந்து நிற்கும் அ.தி.மு.க-வை ஒன்றுசேர்க்கும் பணியிலும், போர்க்கொடி தூக்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களைச் சமரசம் செய்யும் பணியிலும்தான் ஈடுபட்டு வருகிறது.
அதிமுக இரண்டு அணியினர்
இதுதான் இந்த ஆட்சியின் மகத்தான சாதனை. மொத்தத்தில் தமிழகத்தின் மீதோ... தமிழக மக்கள் மீதோ கொஞ்சமும் கவனம் செலுத்துவதில்லை. இருக்கும்வரை பணத்தைச் சம்பாதித்துக்கொண்டு, பதவியை அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசையாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் இருக்கும் ஆட்சியை, அவற்றின் சாதனைகளை என்னவென்று சொல்வது? குறிப்பாக, அந்தக் கட்சியில் இருப்பவர்களே, 'இந்த ஆட்சியே வேண்டாம். இதுவரை அவர்கள் செய்ததே போதும்' என்கிறார்கள் வெறுப்புடன். அப்படியிருக்கையில், தமிழக மக்களுக்கு இந்த ஆட்சி எப்படிப் பிடிக்கும்?'' என்றனர் சற்றே வேகத்துடன்.
க அரசின் மகத்தான சாதனைகளுக்கு மக்கள்தான் பதில் சொ