புதன், மே 31, 2017

மணல் தட்­டுப்­பாட்டை நீக்க விரை­வான தீர்வு வேண்­டும் ; யாழ். ஒருங்­கி­ணைப்­புக் குழு­வால் அவ­சர தீர்­மா­னம் நிறை­வேற்­றம

‘யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் அபி­வி­ருத்­திப் பணி­க­ளுக்­குத் தேவை­யான மண­லைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­குக் கொழும்பு அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்’ இவ்­வாறு வலி­யு­றுத்தி யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்­டத்­தில் அவ­சர தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் யாழ்.மாவட்டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் 
மாவட்­டத்­தில் முக்­கிய பிரச்­ச­னை­யாக மணல் உள்­ளிட்ட கனி­ய­வ­ளங்­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தில் உள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தீர்வு கிடைக்க வேண்­டும் என்று பிர­தி­நி­தி­க­ளால் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

“மக்­கள் பாவ­னை­யில் இருந்த காடு­களை வன­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­கள் தமக்கு சொந்­த­மான காணி­கள் எனத் தெரி­வித்து அப­க­ரித்து வைத்­தி­ருக்­கின்­ற­னர். அவர்­கள் எமது வளங்­களை அப­க­ரித்து வைத்­தி­ருந்­தால் வடக்க மாகா­ணத்தை எவ்­வாறு அபி­வி­ருத்தி செய்­வது? முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் அதி­க­ள­வில் கனி­ய­வ­ளங்­க­ளைக் கொண்ட பிர­தே­சங்­களை வன­வள அதி­கா­ரி­கள் தமது கட்­டுப்­பாட்­டில் வைத்­துள்­ள­னர். 

அதனை நாம் மீட்­டெ­டுத்­தாலே மாகா­ணத்­தின் கனி­ய­வ­ளங்­கள் பிரச்­சி­னைக்கு ஓர­ளவு தீர்­வைக் காண­லாம்” என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஆனோல்ட் தெரி­வித்­தார்.

“யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் அபி­வி­ருத்­திப் பணி­க­ளில் மணல் உள்­ளிட்ட கனிய வளங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தில் பெரும் சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. யாழ்ப்­பா­ணம் நாகர்­கோ­வில் பகு­தி­யில் மட்­டும் மணலை எடுப்­ப­தால் மாவட்­டத்­தின் கனி­ய­வ­ளங்­கள் பிரச்­சி­னை­யைத் தீர்க்க முடி­யாது. 

அதற்­கான மாற்­றீட்டு யோச­னை­களை நாம் ஆரா­ய­வேண்­டும். இது தொடர்­பில் கனி­ய­வ­ளத் திணைக்­க­ளக அதி­கா­ரி­கள் ஏதா­வது திட்­டங்­கள் வைத்­துள்­ளீர்­களா?” என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் இணைத் தலை­வ­ரு­மான மாவை­சே­னா­தி­ராஜா கேட்­டுக்­கொண்­டார்.

“யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் மழை வீழ்ச்சி குறைந்­துள்­ள­தால் தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் ஆற்று மணலை எடுப்­ப­தில் சிக்­கல்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு மாற்­றீ­டாக வடக்கு மாகா­ணத்­தில் இருக்­கின்ற குளங்­களை தூவா­ரு­வ­தன் ஊடாக கணி­ச­மான மண­லைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். எமது மாகா­ணத்­தில் சில குளங்­கள் அவ்­வாறு தூர்­வா­ரப்­ப­டா­மல் காணப்­ப­டு­கின்­றன.

சில குளங்­களை ஆழ­மாக்க வேண்­டிய தேவை உள்­ளது. குளங்­க­ளில் இருக்­கின்ற மணல் மற்­றும் சேறு­களை அள்ள வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான செயற்­பாட்­டுக்­குச் சம்­பந்­தப்­பட்ட திணைக்­க­ளங்­க­ளின் உத­வி­யு­டன் மேற்­கொள்­ளு­வோ­மாக இருந்­தால் மாவட்­டத்­தில் கனி­ய­வ­ளங்­க­ளில் இருக்­கின்ற சில பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யும்” என்று கனி­ய­வ­ளங்­கள் திணைக்­கள அதி­காரி பதி­ல­ளித்­தார்.

திணைக்­கள அதி­கா­ரி­யின் யோச­னையை பரி­சீ­லிப்­ப­து­டன் மாவட்­டத்­தின் கனி­ய­வ­ளங்­க­ளின் பிரச்­ச­னைக்­குத் தீர்­வு­காண உட­னடி நட­வ­டிக்­கை­யைக்  கொழும்பு அரசு  எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி அவ­சர பிரே­ரணை ஒன்றை மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு நிறை­வேற்­றி­யது.  அத்­து­டன், கொழும்பு அரசு வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­ய­வுள்ள மண­லில் நாமும் பங்கு கேட்டு வாங்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.