புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 23, 2017

ஈபிடிபி தளபதி நெப்போலியனையும் , மதனராஜாவையும் கைது செய்வதற்கு உதவுமாறு சர்வதேச பொலிசாரிடம் ( interpol ) வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது

 கடந்த வருட இறுதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த நபருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதனராஜாவுக்கும் , ஈபிடிபி உறுப்பினர் ஜீவன் ( சேதுபதி ) என்பவருக்கும் இரட்டை தூக்கு தண்டனையும் + இருபது வருட கடூழிய சி
றைத்தண்டனை தீர்ப்பும் வழங்கியிருந்தார் . இவர்களில் சேதுபதி மாத்திரமே கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ளார் . மார்ச் 31 ம் திகதிக்குள் பிரிட்டனிலுள்ள ஈபிடிபி தளபதி நெப்போலியனையும் , மதனராஜாவையும் கைது செய்வதற்கு உதவுமாறு சர்வதேச பொலிசாரிடம் ( interpol ) வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது . ஆனாலும் கைது இடம்பெறவில்லை . ஏப்ரல் முதல் வாரத்தில் இவர்களை கைதுசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் வரைந்திருந்தார் இளஞ்செழியன் . ஆனாலும் இன்னமும் இவர்கள் கைதுசெய்யப்படவில்லை . 2001 ல் நாரந்தனை பகுதியில் இருவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த வழக்கிலே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது . ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தீவக பிராந்தியத்தின் பொறுப்பாளராக திருகோணமலையினை சேர்ந்த செபஸ்ரியன் எனும் நெப்போலியன் நீண்டகாலமாக செயற்பட்டிருந்தார் . நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவரை திருமணம் முடித்துள்ள இவர் 2004 ல் கடலினூடாக இந்தியாவுக்கு தப்பிச்சென்று கள்ள பாஸ்போட் மூலம் uk சென்று குடும்பத்தினருடன் ஜாலியாக வாழ்ந்து வருகின்றார் . தீவக பிராந்தியத்தில் 1992 - 2001 காலப்பகுதியில் நடைபெற்றிருந்த பல நூறு கொலைகளுடன் இந்தநபர் நேரடித்தொடர்புடையவராவார் . பிரபல ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கிலும் இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் . இவர் கைதுசெய்யப்பட்டால் நிமலராஜன் கொலை வழக்கு மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்படும் நிலையுள்ளது . இக்கொலைக்கு உத்தவிட்ட ஈபிடிபி தலைமையும் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் அதிகமாகவே தென்படுகின்றது . முகநூலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக பொங்கியெழும் சில புலம்பெயர் போராளிகள் இந்த ஒட்டுக்குழுக்களின் செயற்பாகளை கண்டுகொள்வதில்லை . காரணம் அவர்களால் தமக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடலாமென்றே ! மிதவாதிகளை முகநூலில் மிதிக்கும் செயற்பாடுகளையே அவர்கள் முகநூலில் தொடர்ச்சியாக மேற்கொள்வதனை அவதானிக்ககூடியதாயுள்ளது . 2015 ல் யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்றுகொண்டிருந்த தருணத்தில் நெப்போலியனை கைதுசெய்யுமாறு பிடியாணை வழங்கப்பட்டிருந்தது . அத்தருணத்திலே கீழேயுள்ள படத்தினை நான் வெளியிட்டிருந்தேன் . நெப்போலியனும் , மதனராஜாவும் ஆஜராகாத நிலையிலேதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது . தீர்ப்பின் பின்னர் மேற்படி இருவரும் தமது கட்சி உறுப்பினர்களே என்றும் தமது கட்சியின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்களே அவர்களென்றும் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்த ஊடகங்களுக்கு முழங்கியிருந்தார் . உடனடியாக தீவிர கவனம் செலுத்துவீர்களா புலம்பெயர் உறவுகளே ? 23 .05 .2017 /#குணாளன் - தீவக ஒருங்கிணைப்பாளர் , இலங்கை தமிழரசு கட்சி