புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 29, 2017

எட்டு மாவட்டங்கள் ஆபத்தான வலயங்களாகப் பிரகடனம்! [Monday 2017-05-29 08:00]

அனர்த்தநிலை காரணமாக 8 மாவட்டங்கள் அதியுயர் ஆபத்து வலயங்களாக தேசிய கட்டட மற்றும் ஆராய்ச்சி அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதால் இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பது ஆபத்தானது என்றும், அடுத்து வரும் நாட்களுக்கு குறித்த பகுதி மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் குறித்த மாவட்டங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னேற்பாடான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது மேலும் உயிராபத்துக்களைக் குறைக்கும் எனவும் குறித்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.