புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூன் 01, 2017

டிடிவி தினகரனுக்கு ஜாமீன்: ரூபாய் 5 லட்சம் செலுத்தவும் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, மேலும் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த வழக்கில் ஜாமீன் கோரி டிடிவி தினகரன் உள்பட கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் டிடிவி தினகரனை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், அவரை சொந்த பிணைத் தொகையாக 5 லட்சம் ரூபாய் கட்ட உத்தரவிட்டது. மேலும், அவரது நண்வர் மல்லிகார்ஜுனாவுக்கும் ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.