புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஜூன் 01, 2017

ஒருவரை சுட்டுக் கொன்ற முன்னாள் புலி உறுப்பினருக்கு மரணதண்டனை

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரவீந்ர ரணராஜா விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே சந்தேகநபருக்கு எதிராக மரண தண்டனை விதித்து தீர்ப்ப
ளித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் வாழைச்சேனை கரதிவெல கடற்கரை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 35 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
2005 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் சிலாபம் பசார் வீதியிலுள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் வைத்து மூதூர் மலிக தீவைச் சேர்ந்த ஆறுமுகன் புவனேந்திரன்(23) என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை, அச்சந்தர்ப்பத்தின் போதே ஹோட்டலுக்குள் வைத்து முனசிங்க முதியன்சலாகே ஜயசிறி என்பவரை அடித்துக் காயப்படுத்தியமை மற்றும் துப்பாக்கியை உடன் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் சிலகாலம் உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்து சிலாபம் பகுதியிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றியுள்ளார். இந்நிலையிலேயே குற்றஞ்சாட்டப்பட்டவர் சிலாபத்திற்கு வந்து அவரை சுட்டுக் கொலை செய்த பின்னர் தப்பிச் செல்கையில் சிலாபம் தெதுறு ஒயாவுக்கருகில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கொலை குற்றத்துக்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதேவேளை காயப்படுத்தியமைக்காக 7,500 ரூபா தண்டப்பணமும் அதனை செலுத்த முடியாத பட்சத்தில் ஆறு மாதகாலம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 10 வருட கால கடூழிய சிறைத்தண்டனையும் காயப்பட்டவருக்கு நட்டஈடாக 50 ஆயிரம் ருபா பணம் செலுத்துமாறும் இல்லாவிடில் அதற்கு பதிலாக ஆறு மாத கால சிறைத் தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.அத்துடன் ஆயுதங்களை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அதனை செலுத்த முடியாதபட்சத்தில் 06 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


சிலாபம் நகரிலுள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்தமை மற்றும் இன்னுமொரு நபரை அடித்துக் காயப்படுத்திய  குற்றச்சாட்டுகளுக்காக ​முன்னாள் புலி உறுப்பினரான 'இசை அமுதன்' என்றழைக்கப்படும் சுப்ரமணியம் மோகன் என்பவருக்கு எதிராக சிலாபம் மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிலாபம் நகரிலுள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்தமை மற்றும் இன்னுமொரு நபரை அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக ​முன்னாள் புலி உறுப்பினரான 'இசை அமுதன்' என்றழைக்கப்படும் சுப்ரமணியம் மோகன் என்பவருக்கு எதிராக சிலாபம் மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ருவரை சுட்டுக் கொன்ற முன்னாள் புலி உறுப்பினருக்கு மரணதண்டனை