புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஜூன் 02, 2017

ஐநா சபையின் புதிய தலைவரானார் மிரோஸ்லாவ் லாஜ்காக்!

ஐநா புதிய தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் பீட்டர் தாம்சனின் பதவிக்காலம், வரும் செப்டம்பர் மாதம் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, நேற்று நடந்த புதிய தலைவருக்கான தேர்தலில், ஸ்லோவேக்கிய நாட்டு வெளியுறவு மந்திரி மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான
அதிகாரபூர்வ அறிவிப்பு, ஐநா.-வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸால் வெளியிடப்பட்டது.
ஐநா.-வின் 72-வது சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிரோஸ்லாவ் லாஜ்காக், கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் ஐநா  -வுக்கான பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா-வின் 72-வது சபைக் கூட்டம், செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. அந்தச் சமயத்தில் புதிய நிர்வாகிகளுக்கான பதவியேற்பு விழா நடைபெறும் என ஐநா அறிவித்துள்ளது.
ஐநா சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிரோஸ்லாவ் லாஜ்காக் கூறுகையில், ‘உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் சமத்துவத்துக்கும் ஏற்ற சரியான முதலீடு, ஐநா சபையை வலுப்படுத்துவதில் உள்ளது’ என்றார்.