தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

ஞாயிறு, ஜூன் 04, 2017

காணாமல்போனோரின் உறவுகள் அமெரிக்க கொடியுடன் வவுனியாவில் பேரணி!

அமெரிக்கா தமக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் இன்று மதியம் பேரணி ஒன்றை நடத்தினர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
வவுனியாவில் நடத்தி வந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர்.

அமெரிக்கா தமக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் இன்று மதியம் பேரணி ஒன்றை நடத்தினர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் நடத்தி வந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர்.

வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர்.

ஊர்வலத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அமெரிக்காவின் தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் “தமிழர்களாகிய நாம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகிறோம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தனது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும், தமிழர் தாயகத்துக்கு வந்து அமெரிக்கா எப்போதும் உதவியளிக்க வேண்டும், எமக்கு அமெரிக்கா மட்டுமே நீதியை பெற்றுத் தர முடியும்” என, அமெரிக்காவின் இலட்சினை பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியையும் ஏந்தியிருந்தனர்.ர்.
அமெரிக்கா தமக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் இன்று மதியம் பேரணி ஒன்றை நடத்தினர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் நடத்தி வந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா தமக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் இன்று மதியம் பேரணி ஒன்றை நடத்தினர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் நடத்தி வந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர்.

வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர்.

ஊர்வலத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அமெரிக்காவின் தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் “தமிழர்களாகிய நாம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகிறோம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தனது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும், தமிழர் தாயகத்துக்கு வந்து அமெரிக்கா எப்போதும் உதவியளிக்க வேண்டும், எமக்கு அமெரிக்கா மட்டுமே நீதியை பெற்றுத் தர முடியும்” என, அமெரிக்காவின் இலட்சினை பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியையும் ஏந்தியிருந்தனர்.