புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூன் 03, 2017

செட்டிக்குளத்தில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

வவுனியா, செட்டிகுளத்தில் குடும்பஸ்தரொருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, செட்டிகுளம், சின்னக்குளத்தில் வசித்த 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா என்ற இரண்டு
பிள்ளைகளின் தந்தையே, செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வீதியோரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்நேற்றுமுன்தினம் பிற்பகல் 5 மணிக்கு, வவுனியா நகருக்கு செல்வதாகக்கூறி பஸ்ஸில் சென்ற இவர், இரவு சுமார் 9 மணியளவில், தனது மனைவியை அலைபேசியில் அழைத்து, தமது கடையின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை எடுத்து விடும்படியும் தான் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறி, அலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார். பின்னர், நீண்டநேரமாகியும் தனது கணவன் வீட்டுக்கு வராதநிலையில், இரவு 10 மணியளவில் அலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டபோது, அலைபேசி இயங்கவில்லை” என, உறவினர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை செட்டிகுளம் - பூவரசங்குளம் வீதியில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் சென்றவர்கள், வீதியோரத்தில் சடலம் கிடப்பதை கண்டு செட்டிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற செட்டிகுளம் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.