புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஜூன் 04, 2017

கொலைகள் புரிந்த இராணுவத்தினரை தண்டிக்காதது ஏன்? சந்திரிகா வெளியிட்டுள்ள கருத்துக் குறித்து

கொலைகள் புரிந்த இராணுவத்தினரை தண்டிக்காதது ஏன்? சந்திரிகா வெளியிட்டுள்ள கருத்துக் குறித்து காணாமற்போனோரின் உறவுகள் கேள்வி
கொலைகள் புரிந்த இராணுவத்தினரை தண்டிக்காதது ஏன்? சந்திரிகா வெளியிட்டுள்ள கருத்துக் குறித்து காணாமற்போனோரின் உறவுகள் கேள்வி
இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் சர­ண­டைந்து காணா­மற்­போ­ன­வர்­கள், இரா­ணு­வத்­தி­ன­ரால் கொலை செய்­யப்­பட்­டி­ருக் க­லாம் என்று முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா தெரி­வித்­துள்­ளார், எனவே அதற்­கு­ரிய ஆதா­ரங்­க­ளை­யும் வெளி­யி­ட­வேண்­டும்.

இரா­ணு­வம் அவர்­க­ளைக் கொலை செய்­து­விட்­டது என்­றால், குற்­றத்தை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்­குத் தண்­ட­னையை வழங்­க­வேண்­டி­ய­து­தானே! இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தேடும் அவர்­க­ளது உற­வி­னர்­கள் நேற்­றுக் காட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் வடக்கு – கிழக்­கில் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இவ்­வா­றான நில­மை­ யில், ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் கருத்­துத் தெரி­வித்த முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா, ‘‘காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் உண்­மை­யி­லேயே உயி­ரு­டன் இருக்­கின்­றார்­களா அல்­லது உயி­ரி­ழந்­து­விட்­டார்­களா என்­ப­தைத் தேடிப் பார்க்க வேண்­டும். எனக்­குத் தெரிந்தவரை அப்­படி யாரை­யும் முகாம்­க­ளில் மறைத்து வைக்­க­வில்லை.

அப்­போது ராஜ­பக்­ச­வின் ஆட்­சி­யி­லி­ருந்த இரா­ணு­வத்­தின் பழக்­கத்­திற்­கேற்ப அவர்­கள் அழைத்­துச் செல்­லப்­பட்டுக் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம். அது எனக்­குத் தெரி­யாது. ஆனால் அப்­போது அவர்­க­ளைப் பொறுப்­பேற்­றி­ருந்­தால் யாரை­யும் கொலை செய்­வார்­களே அன்றி, இவ்­வ­ளவு வரு­டங்­க­ளா­கத் தடுத்து வைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்துத் தொடர்பில், கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் அவர்களது உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
சந்திரிகா தான் தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஆதாரத்தைக் கொண்டிருக்கவேண்டும். அந்த ஆதாரத்தை வெளியிடவேண்டும். உண்மையில் அவரிடம் ஆதாரம் இருந்திருந்தால், அதனை ஏன் இவ்வளவு நாளும் வெளிப்படுத்தவில்லை.

நாம் இராணுவத்திடம் ஒப்படைத்த உறவுகளை அவர்கள் கொன்று விட்டார்கள் என்றால், குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டியதுதானே. பின்னர் ஏன் வெளிநாடுகளுக்குச் சென்று, காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கின்றோம், விசாரணை நடத்துகின்றோம் என்று கூறவேண்டும்.

சந்திரிகா அம்மையார் தெரிவித்த இந்தக் கருத்துக்கு எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் - என்றார்கள்.