புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஜூன் 02, 2017

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டுவரும் தேவா பிரகாஸ் திருச்சியில் சிக்கினர் ; வெளிநாட்டுக்குத் தப்பிக்கவிருந்தநிலையில் இந்தியக் கியூப் பிரிவுப் பொலிஸாரால் கைது

யாழ்ப்­பா­ணத்­தில் வாள்­வெட்­டுக் கும்­பலை இயக்கி வரு­ப­வர்­கள் என்­றும், பலரை வெட்­டிச் சரித்­தார்­கள் என்ற குற்­றச்­சாட்­டி­லும் பொலி­ஸா­ரால் நீண்­ட­கா­ல­மா­கத் தேடப்­பட்டு வந்த தேவா, பிர­காஸ் ஆகிய இரு­வர் தமி­ழ­கம் திருச்­சி­யில் வைத்து இந்­திய கியூப் பிரி­வுப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் இரு­வ­ரும் உரிய ஆவ­ணங்­க­ளின்றி தமி­ழ­கத்­தில் தங்­கி­யி­ருந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டி­லேயே கியூ பிரி­வுப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­களை தமி­ழ­கத்­துக்கு அழைத்து வந்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் டானி­யல் என்ப­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். 

“கும்­ப­லின் தலை­வர் எனத் தெரி­விக்­கப்­ப­டும் பிர­சன்னா (சன்னா) என்­ப­வர் வெளி­நாட்­டுக்­குத் தப்­பிச் சென்­றுள்­ளார். ஏனை­ய­வர்­கள் இலங்­கை­யில் ஏதோ ஒரு இடத்­தில் தலை­ம­றை­வாகி உள்­ளார்­கள்” என்று அண்­மை­யில் பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

கைது செய்­யப்­பட்ட­ இரு­வ­ரும், தாம் இலங்­கை­யில் “இன்­பம் துன்­பம்” என்ற குழு­வில் அங்­கத்­த­வர்­க­ளாக இருப்­ப­தாக­ இந்­தி­யப் பொலி­ஸா­ரி­டம் தெரி­வித்­துள்­ள­னர். எனி­னும் அவர்­கள் இரு­வ­ரும் ஆவாக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள்­தான் என்று இலங்­கைப் பொலி­ஸார் உறு­தி­யா­கத் தெரி­விக்­கின்­ற­னர்.

வெளி­நாடு ஒன்­றுக்கு தப்­பிக்­கும் நோக்­கி­லேயே அவர்­கள் இரு­வ­ரும் திருச்­சி­யில் தங்­கி­யி­ருந்­த­னர் என்று தெரி­வித்த இந்­தி­யப்  பொலி­ஸார், இரு­வ­ரி­ட­மும் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­ட­னர்.

இதே­வேளை, தேவா, பிர­காஸ் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து இலங்­கை­யி­லி­ருக்­கும் அவர்­க­ளது கும்­ப­லைச் சேர்ந்­தோர் சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் பல்­வேறு கருத்­துக்­க­ளைப் பதிவு செய்து வரு­கின்­ற­னர். சிலர் தமது முக­நூல் பக்­கங்­க­ளின் படங்­களை கறுப்­பாக மாற்­றி­யுள்­ள­னர்.