புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஜூன் 02, 2017

காணாமல்போனோர் விவகாரம்- ஆளுனருக்கு சுமந்திரன் பதிலடி

காணாமல்போனோர் விவகாரம் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறாது என்று கூறுவதற்கு வடக்கு மாகாண ஆளுநருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. சட்ட ஏற்பாடுகளை அறியாத ஆளுநர், தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் கருத்துக்கூறுவதை ஏற்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்த விதமான விசார
ணையும் செய்ய முடியாது. அவர்கள் தொடர்பில் உறவினர்கள் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளட்டும்" என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
காணாமல்போனோர் விவகாரத்துக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதுதொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டவரைபில் திருத்தம் செய்வதற்காக எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.
இந்தநிலையில், காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது என்று வடக்கு மாகாண ஆளுநர் கருத்து கூறமுடியாது. இந்தச் சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டே உருவாக்கியது. ஜனாதிபதியின் வாக்குறியளித்ததன் பிரகாரம் காணாமல்போனோர் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்படும். அந்த நிலையில் சட்ட ஏற்பாட்டை அறியாத ஆளுநர், தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்து கூற முற்படக்கூடாது. எனவே, வடக்கு மாகாண ஆளுநரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" - என்றார்.