சனி, ஜூன் 03, 2017

என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம்: டி.டி.வி.தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீதான வழக்கில் டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது. 

இதையடுத்து சென்னை திரும்புவதற்காக டெல்லி விமானநிலையத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கட்சியிலிருந்து என்னை நீக்கியதாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. சென்னை சென்று மீண்டும் கட்சி பணிகளை தொடங்க உள்ளேன். மத்திய அரசுக்கு பணிந்து செல்ல வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. சிறையிலிருந்த போது தமிழகத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இவ்வாறு அ
வர் கூறியுள்ளார்.