புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஜூன் 02, 2017

திஹார் சிறையிலிருந்து விடுதலையானார் டி.டி.வி.தினகரன்

நேற்று ஜாமீன் பெற்ற டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா இருவரையும் விடுவித்தது திஹார் சிறை நிர்வாகம். இரட்டை இலைச் சின்னத்தைத் தங்களது அணிக்குப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் டி.டி.வி.தினகரன்.

சிறைவாசம் பெற்றுவந்த தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்நிலையில், டெல்லி திகார் சிறையிலிருந்து தினகரனும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் தற்போது விடுதலையாகியுள்ளனர். மே 1-ம் தேதி முதல்  டி.டி.வி. தினகரன் திஹார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். 
இந்நிலையில், டி.டி.வி.தினகரன் நாளை சென்னை வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.