புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஜூன் 04, 2017

கிளிநொச்சியில் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற ஆசிரியர் கைது!

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், பயிலும் உயர்தர மாணவியை கருத்தரங்கிற்கு என்று கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற, கணித பாட ஆசிரியர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், பயிலும் உயர்தர மாணவியை கருத்தரங்கிற்கு என்று கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற, கணித பாட ஆசிரியர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். இதன் பின்னர் ஆசிரியருக்கு பல தடவைகள் தொடர்பை ஏற்படுத்திய போதும் மாணவி கருத்தரங்கில் இருப்பதனால் சிறிது நேரத்தில் அழைப்பை ஏற்படுத்துங்கள் என ஆசிரியரால் கூறப்பட்டுள்ளது. இதனால் மாணவியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டது. சில மணிநேரத்துக்குள் மாணவியும் ஆசிரியரும் விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

மாணவி கிளிநொச்சி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தர்மபுரம் போலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.