புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூன் 03, 2017

திருகோணமலையில் பள்ளிவாசலுக்குத் தீவைப்பு! - தொடரும் வெறுப்புணர்வு நடவடிக்கைகள்

திருகோணமலை பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசலுக்கு இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.00 மணிக்கும் இன்று அதிகாலை 3.00 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம்
நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்டுகின்றது. குறிப்பிட்ட 4 மணி நேரத்திற்குள் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இத்தீ வைப்பினால் வணக்கஸ்தலத்திற்கு உள்ளே இருக்கின்ற தரைவிரிப்புகள் தீயினால் கருகி உள்ளதை காணக்கூடியதாக இருந்ததுடன், இரண்டு மதுபான போத்தல்களும் அதற்குள் எரிபொருளும் இருந்ததைக் காண முடிகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைய நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது