புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஜூன் 02, 2017

ChampionsTrophy: ஆஸ்திரேலியா - நியூசிலாந்து போட்டி ரத்து!

ஆஸி
இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே நடந்த சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என 8 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் வங்காள தேசத்தைச் சந்தித்த இங்கிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா.
 முதலில் ஆடிய நியூசிலாந்து 45 ஓவர்கள் முடிவில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேன் வில்லியம்சன் 97 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இதையடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 9 ஓவர்களில் 53 ரன்கள் குவித்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது இலங்கை.