www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஜூலை 15, 2017



கடந்த 10-ஆம் தேதி காலை 5.30 மணிக்கெல்லாம் ஆலுவா போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுசெல்லப்பட்டார் திலீப். இருப்பினும் மாலை 6.30 மணிக்குத்தான் திலீப்பை கைது செய்ததாக சட்டபூர்வமாக அறிவித்தார்கள். 

திலீப்பிடம் விசாரணை நடக்கத் தொடங்கிய நேரத்தில் ஏற்கனவே பல்சர் சுனியையும் போலீஸார் அங்கே தங்கள் கஸ்டடியில் வைத்திருந்தனர். திலீப்பையும் சுனியையும் ஒன்றாக அமர வைத்து விசாரணை நடத்தியதால் திலீப் உண்மைகளை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதிகாரிகளிடம் திலீப் கொடுத்ததாகச் சொல்லப்படும்  ஸ்டேட்மெண்ட்...

""2013-ஆம் வருஷம், பல்சரிடம் பாவனாவை ஏதாவது செய்யணும் என்கிற இந்த அசைன்மெண்ட்டை கொடுத்தேன். 50 லட்ச ரூபாய்  விலையும் பேசி முடித்தேன். மலையாள திரைப்பட சங்கமான "அம்மா' அமைப்பு சார்பில் "மழவில் அழகில்' என்கிற நிகழ்ச்சியை நடத்துவதற்காக கொச்சியில் உள்ள அபோர்ட் பிளாசா என்கிற ஹோட்டலில் ரிகர்ஸல் செய்தோம். அங்கு எனக்கும் பாவனாவுக்கும் இடையே பெரிய சண்டை. பல்சரும் என்னுடன் அப்போது இருந்தார். பாவனாவும் பல்சரும் எனக்கு நெருக்கமானவர்கள்தான். என்னுடைய பெண் தொடர்பு மற்றும் காவ்யாவுடன் நெருக்கமாக இருப்பது பற்றி என் மனைவி மஞ்சுவிடம் பாவனா போட்டுக்கொடுத்தார். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை. இந்தக் கோபத்தில்தான் பாவனாவிடம் "உன்னைக் கொன்னேபுடுவேன்' என எச்சரித்தேன். இதனால் எனக்கும் பாவனாவுக்கும் இடையே பெரிய அளவில் வாய்ச்சண்டை ஏற்பட்டது. 

அந்த டென்ஷனுடன் ஹோட்டல் ரூமில் மது அருந்தச் சென்றேன். மது போதையில்... பல்சரை கூப்பிட்டு, 50 லட்ச ரூபாய் கொட்டேஷன் கொடுத்து பாவனாவை கடத்தச் சொன்னேன். அப்புறம் அந்த அசைன்மெண்ட்டை விட்டுவிட்டேன். 

"(கன்னட தயாரிப்பாளர்) நவீனுடன் பாவனாவுக்கு திருமணம் நிச்சயமானது. அவளுக்கு கல்யாண வாழ்க்கையே இருக்கக்கூடாது, அதற்கு அவ சிரிச்ச முகத்தோட நிர்வாணமா இருக்கிற மாதிரி வீடியோ எடுக்கணும். அதுல அவளோட நிச்சயதார்த்த மோதிரமும் தெரியணும். இப்படி ஒரு வீடியோவ எடுத்து நவீனுக்கு  அனுப்பி அவளோட கல்யாணத்தை நிறுத்தணும்' என பல்சரிடம்  சொன்னேன். அதன்படியே பாவனாவை கடத்தி 41 நிமிஷம் வீடியோ எடுத்தான் பல்சர். ஆனா அந்தக் கடத்தலின்போது "ஒரு ஆள் சொல்லித்தான் உன்னைக் கடத்துறேன்'னு   பாவனாகிட்ட பல்சர் சொல்லிட்டான். அதில்தான் பிரச்சினை. 


அங்கமாலி பக்கத்துல அத்தானிங்கிற இடத்துல இருந்து பாவனாவை கடத்தும்போதே எனக்குத் தெரியும். ஒன்றரை மணி நேரம் கழிச்சு காக்கநாடுல பாவனாவை இறக்கி விட்டாங்க. இதுவும் எனக்குத் தெரியும். பாவனா லால் வீட்டுக்கு போறதையும்  வாட்ச் பண்ணினேன். இந்த சம்பவம் நடந்த பிறகு எனக்கே எல்லாரும் போன் பண்ணினாங்க. நான் சரியா அட்டன் பண்ணல. ஜெயில்ல இருந்து என் மேனேஜர் அப்புண்ணிக்கும் நண்பர் நாதிர்ஷாவுக்கும் என் பிரதருக்கும் பல்சர் போன் பண்ணினான். இதனால் சுதாரித்துக்கொண்ட நான், பல்சர் என்னை மிரட்டுவதா புகார் கொடுத்தேன்''

-இப்படி திலீப் வாக்குமூலம் கொடுத்ததாக விசாரணை அதிகாரிகள் மூலம் நமக்குத் தெரிய வந்தது. திலீப் கைதைத் தொடர்ந்து காவ்யாவுக்கும் அவரது அம்மாவுக்கும் பொறி வைத்துள்ளனர்.
இ.பி.கோ. "120-பி' பிரிவின்படி 11-ஆவது  குற்றவாளியாக திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களில்... முக்கிய குற்றவாளியாக திலீப்  கொண்டுவரப்படலாம். ஆயுள்தண்டனை வரை  கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. 

"வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்'

இது ஜெயிலுக்குப் போவது போல்  திலீப் நடித்த ஒரு படத்தின் பெயர்.