சனி, ஜூலை 22, 2017

அமெரிக்க தூதுவர் கோரியபடி சிவில் உடையில் வந்து 10 இலட்சம் ரூபாவைத் தரத் தயாராக இருந்தார் பிரபாகரன்

வல்வெட்டித்துறையில் விடுதலை புலிகளால் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையாக மாற்றியமைக்க இணக்கம் வெளியிட்ட வே.பிரபாகரன், 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்குவதற்கும் ஒப்புதல் வழங்கியிருந்தார் என்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
வல்வெட்டித்துறையில் விடுதலை புலிகளால் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையாக மாற்றியமைக்க இணக்கம் வெளியிட்ட வே.பிரபாகரன், 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்குவதற்கும் ஒப்புதல் வழங்கியிருந்தார் என்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 3 வருட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் நேற்று மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

2003ம் ஆண்டு காலப்பகுதியில் ஐ.நா அகதிகளுக்கான ஸ்தாபனத்தின் யாழ்.பணிப்பாளராக இருந்த திருமதி மொறிஸ் மொஹான் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் யாழ்ப்பாணத்தில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலையை உருவாக்க இணக்கம் தெரிவித்தார். அந்த வைத்தியசாலை அதி நவீன வசதிகளுடன் ஒரு நோயாளியின் குடும்பமே தங்கியிருந்து வைத்தியம் பெறும் வகையில் வடிவமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக தமிழீழ விடுதலை புலிகள் வல்வெட்டித்துறையில்அமைத்திருந்த நிலக்கீழ் மருத்துவ மனையை புற்றுநோய் மருத்துவ மனையாக மாற்றும் யோசனையை நாங்கள் முன்மொழிந்தோம்.

அப்போது அப்போதிருந்த அமெரிக்க தூதுவர் அஸ்லி வில்ஸ் அந்த மருத்துவனை புலிகளின் மருத்துவமனை என்பதால் அதற்கு புலிகள் பகிரங்கமாக ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் எனவும் புலிகள் ஒருதொகை நிதியை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார். அதற்கமைய நாம் தலைவர் பிரபாகரனுடன் பேசியிருந்தோம். அப்போது புலிகள் சார்பில் 1 லட்சம் ரூபாய் கேட்டோம். அவர் ஒரு லட்சம் எப்படி வழங்குவது அழகல்ல எனவும் அதற்காக 1 கோடி வழங்க தன்னிடம் பணம் இல்லை எனவும் கூறி, 10 லட்சம் ரூபாய் பணத்தை தருவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

அத்துடன், அதனை சிவில் உடையில் வந்து தருவதற்கும் இணங்கினார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் அது தொடர்பாக பேசப்பட்ட போது இங்குள்ள தமிழ் தலைவர்கள் அதனை குழப்பினார்கள். அப்போது வல்வெட்டித்துறையில் கட்ட விரும்பாவிட்டால் யாழ்ப்பாணத்தில் வேறு பகுதியிலாவது கட்டுங்கள் என நான் கேட்டேன். அதனையும் அவர்கள் மறுத்தார்கள். இப்போது ஒரு முறையான மருத்துவ வசதிகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை இல்லாமல் எமது மக்கள் கஸ்டப்படுகின்றார்கள் என கூறினார்