www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஜூலை 21, 2017

வடமாகாணத்தில் 118 தாதிய உத்தியோகத்தர்கள் நியமனம்

வடமாகணத்தில் நிலவுகின்ற தாதியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பாக வடமாகாண தாதியர் சங்க உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் முன்வைத்த கோரிக்கு இணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் இந்த முறை உள்வாங்கப்படுகின்ற தாதிய உத்தியோகத்தர் வடமாகாணத்தில் இருந்து அதிகளவானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்தார்.

இதன் அடிப்படையில் 2017 ம் ஆண்டிற்கான தாதியஉத்தியோகஸ்த்தர் தெரிவில் முதல் தடவையாக 118 பேர் தெரிவு செய்யப்பட்டமை வடமாகாணத்திற்கு கிடைத்திருக்கின்ற பெரு வெற்றியாகும்.

மேலும் தாதியஉத்தியோகத்தர் தெரிவில் இருகின்ற வயது கட்டுப்பாட்டு எல்லை கூட்டப்பட்டுவதுடன் தாதியஉத்தியோகத்தர் தெரிவில் ஆண்களின் விகிதாசாரம் ஐந்து வீதத்தில் இருந்து அதிகரிக்க செய்து தகுதியான அனைவரையும் உள்ளீர்த்தல் தாதியர்களுகான விண்ணப்பங்கள் கோரப்படும்போது அதற்க்கு முந்திய 2 ஆண்டில் கா பொ த உயர்தரத்தில் தோற்றிய மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் என்ற வரையறை உள்ளது. இதனால் எமது வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்தநிலமையை நீக்கி இன்னும் கூடிய தாதியஉத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கான வடமாகாணத்தை உள்ளீர்க்க கூடியாதாக விசேட அமைச்சரவை பத்திரம் தாக்குதல் செய்வதற்கான நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.