கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்.. தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம் ,,விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான குறித்த சிவப்பு அறிக்கைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக,உதயங்க வீரதுங்க,, பூகோள அரசியல் போட்டியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார் சம்பந்தன்! 70

வெள்ளி, ஜூலை 14, 2017

விம்பிள்டன் டென்னிஸ்: 12-வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார் ஃபெடரர்!

ரோஜர் ஃபெடரர்
விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில்,
ஸ்விட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர் மற்றும் கனடா நாட்டின் மிலோஸ் ராயோனிக் மோதினர்.

ஏழு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஃபெடரருக்கு, உலகின் ஏழாம் நிலை வீரரான மிலோஸ் ராயோனிக் கடுமையான டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே ஃபெடரரின் கையே ஓங்கியது. இதனால்,  6-4, 6-2, 7-6 (7/4) என்ற செட் கணக்குகளில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸில் 12-வது முறையாக ஃபெடரர் அரையிறுதிப் போட்டிக்கு
முன்னேறியுள்ளார். அரையிறுதிப் போட்டியில் அவர் தாமஸ் பெர்டிச்சுடன் மோத உள்ளார். தாமஸ் கடந்த 2010-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸில் இறுதிப் போட்டி வரை தகுதிப் பெற்றவர். 
விம்பிள்டன் டென்னிஸில் நடால், முர்ரே, ஜோகோவிக் போன்ற முன்னணி வீரர்கள் வெளியேறியுள்ள நிலையில், அனைவரது பார்வையும் தற்போது ஃபெடரரின் பக்கம் திரும்பியுள்ளது. நடப்பு விம்பிள்டன்னையும் அவர் தன் வசப்படுத்தும்பட்சத்தில், விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறை கைப்பற்றும் முதல் வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைப்பா

ர்