தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 25, 2017

14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். முன்னதாக அவர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி சிலையில்

மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அவரது மனைவி சவிதா உடன் இருந்தார்.

இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து பதவியேற்புக்காக புறப்பட்ட அவர் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு பிரணாப் முகர்ஜியுடன், ராம்நாத் கோவிந்த் ஒரே காரில் பயணம் செய்து வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு குதிரைப்படை வீரர்களின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பதவி ஏற்க நாடாளுமன்றத்திற்கு வந்த ராம்நாத் கோவிந்த்தை துணை ஜனாதிபதியும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரும் வரவேற்றனர்.

பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் ராம்நாத் கோவிந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்துக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.