தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

ஞாயிறு, ஜூலை 16, 2017

சென்னை பேக்கரியில் தீவிபத்து: 29 பேர் படுகாயம்: தீயணைப்பு வீரர் பலி

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள பேக்கரியில் நள்ளிரவில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேக்கரியின் கதவை திறந்து தீயை கட்டுக்குள் கொண்டு முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதத்தில் கடையின் உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில், தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கொடுங்கையூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் போலீசார் ஜெயபிரகாஷ், அந்தோணி, புருஷோத்தமன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

மொத்தம் 29 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதில், யேகராஜன் என்ற தீயணைப்பு வீரர் இன்று காலை உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்களை சந்தித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். மேலும், தீ விபத்தில் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.