திங்கள், ஜூலை 17, 2017

டென்னிஸ் தரவரிசை: ரோஜர் பெடரர் 3-வது இடத்திற்கும், முகுருசா 5-வது இடத்திற்கும் முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூலை 3-ந்தேதி முதல் நேற்று வரை லண்டன் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்
ரோஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முகுருசாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

இந்த சாம்பியன் பட்டம் மூலம் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்த தொடருக்கு முன் ரோஜர் பெடரர் 5-வது இடத்தில் இருந்தார். தற்போது 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


நம்பர் ஒன் வீராங்கனை

பெண்கள் தரவரிசையில் முகுருசா 15-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் 10 இடங்கள் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஏஞ்சலிக் கெர்பர் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். வீனஸ் வில்லியம்ஸ் 11-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

விம்பிள்டன் 2-வது சுற்றிலேயே தோல்வியடைந்த கரோலினா பிளிஸ்கோவா நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த 23-வது வீராங்கனை இவராவார்.