சனி, ஜூலை 15, 2017

700 கோடி ரூபாவில் பருத்தித்துறையில் துறைமுகம்

700 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் பருத்தித்துறையில் புதிய துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
பருத்தித்துறையில் மற்றொரு துறைமுகத்தினை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று கொட்டி பகுதியில் கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
கடற்றொழில் துறைமுகமாக பருத்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய இரண்டு துறைமுகங்கள் அடையாளம் காணப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி பங்களிப்பில் துறைமுகங்கள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.
700 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் பருத்தித்துறையில் புதிய துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. பருத்தித்துறையில் மற்றொரு துறைமுகத்தினை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று கொட்டி பகுதியில் கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. கடற்றொழில் துறைமுகமாக பருத்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய இரண்டு துறைமுகங்கள் அடையாளம் காணப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி பங்களிப்பில் துறைமுகங்கள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

முதற்கட்டமாக 700 கோடி ரூபா நிதி செலவில் பருத்தித்துறை துறைமுகம் புனரமைப்புச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடி மீனவ குடும்பங்களுக்கும் இடையில் வேறுபட்ட சில அபிப்பிராயங்கள் இருப்பதனால் இந்த மக்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கடற்றொழில் சங்கங்கள் மற்றும் மீனவ குடும்பங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்த கலந்துரையாடலின் போது, மக்கள் தமது அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர். அரசாங்கமும் தனது அபிப்பிராயத்தினை கூறியுள்ளனர். மிக விரைவில் மக்களின் பிரச்சினைகளை மீளாய்வு செய்யப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.