புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஜூலை 10, 2017

அமர்நாத்துக்கு புனித யாத்திரை சென்ற பயணிகளின் மீது தீவிரவாதிகள் கடும் தாக்குதல்: 7 பேர் பலி

அமர்நாத்துக்கு புனித யாத்திரை சென்ற பயணிகளின் மீது தீவிரவாதிகள் கடும் தாக்குதலில், 7 பேர் பலி உயிரிழந்தனர் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.


கடந்த 8-ம் தேதி முதல் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி நினைவு தினம் வருவதையொட்டி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் புகழ்பெற்ற பனிலிங்க தரிசன அமர்நாத் யாத்திரையும் தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான பனிலிங்க தரிசன அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. முதல் குழுவாக 4000 பேர் சென்றனர். பின்னர்தான் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்ற உளவுத்துறை தகவலை அடுத்து இந்தப் பயணம் நிறுத்தப்பட்டது.


இந்நிலையில் இன்று மாலை காஷ்மீரின், அனந்த்நாக் பகுதியின் அருகே பயணிகள் சென்ற பேருந்தை குறிவைத்து காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கோர சம்பவத்தில் 7 பயணிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலை அறிந்து பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.