புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூலை 08, 2017

பேரறிவாளனுக்கு பரோல் - ஸ்டாலின் கேள்விக்கு எடப்பாடி பதில்!

பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்வதற்கான முயற்சியை  அரசு எடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தில் பேரறிவாளன் பரோல் குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்யும் என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகிய மூவரும், சட்டசபையில் பேரறிவாளன் பரோல் குறித்தும், 14 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு, எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவையொட்டி, பொது மன்னிப்பு கொடுத்து, விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தனர். மேலும், மு.க.ஸ்டாலினை சந்தித்து, தாங்கள் கொடுத்துள்ள தீர்மானத்திற்கு,  ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.