திங்கள், ஜூலை 10, 2017

வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்க தென் கொரியா - அமெரிக்கா போர் ஒத்திகை

பல்வேறு எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டுப்படைகள் பிரமாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டன. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வருகின்றது. அந்நாட்டின் மீது ஐ.நா பொருளாதார தடை விதித்துள்ள போதிலும் வட கொரியா எதையும் பொருட்படுத்தவில்லை.

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கி அழிக்க கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனையை வட கொரியா செய்தது. இந்நிலையில் தென் கொரியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க படைகளும் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளையும் சேர்ந்த விமானங்கள் நேற்று வானில் பறந்து குண்டு மழை பொழிந்தன.