www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஜூலை 15, 2017

டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள்-மைத்திரிபால

கூட்டு அரசிலிருந்து வெளியேறுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, கட்சிக்குள் கடும் அழுத்தம் பிரயோகிக்க
ப்பட்டுள்ள நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பயணத்துக்கு முன்னதாக, அவசர அவசரமாக நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சரான ஜோன் செனவிரத்தின, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துடன் அரசிலிருந்து தாம் வெளியேறப் போவதாகக் கூறியுள்ளார். அதிருப்தி அமைச்சர்கள் சிலரும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வெளியேறுவதாக இருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற வேண்டும். நாம் கூட்டு அரசில் இருப்பதால்தான், சில விடயங்களை எதிர்க்கக் கூடியதாக உள்ளது. மக்கள் விரோத தீர்மானங்களை தோற்கடிக்க முடிகின்றது. எங்களில் ஒரு பகுதியினர் வெளியேறினாலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தை ஆதரிக்கும் வகையில், எஸ்.பி.திசநாயக்க, மகிந்த சமரசிங்க ஆகியோரும் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
மிகக் காரசாரமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இறுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருங்கள். வரவு – செலவுத் திட்டக் கூட்டத் தொடருடன் முக்கிய முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார்.