செவ்வாய், ஜூலை 18, 2017

யார் அடுத்த அமைச்சர் ? ; ரெலோவுக்குள் குழப்ப நிலை


வட மாகாண அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னுக்­குப் பதி­லாக ரெலோ­வின் சார்­பில் அமைச்­ச­ர­வைக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரத்தினத்தை நிய­மிப்­ப­தற்கு அந்­தக் கட்­சிக்­குள்ளேயே எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. இத­னால் அந்­தக் கட்­சி­யி­னுள் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் ரெலோ­வின் சார்­பில், மன்­னார் மாவட்­டத்­தைப் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­திய பா.டெனீஸ்­வ­ரன் 2013ஆம் ஆண்டு போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி, வர்த்­தக வாணிப, கிராம அபி­வி­ருத்தி, வீதி அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார். வடக்கு மாகாண சபை­யில் அண்­மை­யில் எழுந்த சர்ச்­சை­யில், முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தில் பா.டெனீஸ்­வ­ரன் கையெ­ழுத்­திட்­டார் . அதனால் அவரைத் தமது கட்­சி­யி­லி­ருந்து விலக்­கு­வ­தாக ரெலோ அமைப்புத் தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த 13ஆம் திகதி வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும் இது தொடர்­பான கடி­தத்தை அந்த அமைப்பு அனுப்­பி­யி­ருந்­தது. அதற்கு அன்­றைய தினமே வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பதில் அனுப்­பி­யி­ருந்­தார். ரெலோ அமைப்­பின் கோரிக்­கையை ஏற்­றுக் கொள்­வ­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

புதி­ய­வர் யார் ?

அமைச்­ச­ர­வை­யில் ரெலோ­வின் சார்­பில் ஏற்­ப­டும் வெற்­றி­டத்­துக்கு யாரை நிய­மிப்­பது என்­பது தொடர்­பில் அந்­தக் கட்சி வவு­னி­யா­வில் நேற்று முன்­தி­னம் கூடி ஆராய்ந்­தது. அந்­தக் கட்­சி­யின் செய­லா­ளர் ந.சிறீ­காந்தா, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரட்­ணத்­தின் பெய­ரைப் புதிய அமைச்­ச­ரா­கப் பிரே­ரித்­துள்­ளார். இதற்­குக் கட்­சித் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், ஞா.குண­சீ­லன், கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் கோவிந்­தன் கரு­ணா­க­ரம் உள்­ளிட்ட முக்­கி­ய­மா­ன­வர்­கள் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ள­னர். இத­னால் கட்­சி­யில் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.

விந்­தனே அமைச்­சர்

இதே­வேளை, ரெலோ அமைப்­பி­னால் ஊடக அறிக்­கை­கள் வழ­மை­யாக அனுப்­பப்­ப­டும் மின்­ம­டல் முக­வ­ரி­யி­லி­ருந்து நேற்று மதி­யம் மின்­ம­டல் ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. அதில், விந்­தன் கன­க­ரட்­ணத்­தையே அமைச்­ச­ரா­கத் தமது கட்சி நாளை (இன்று) முத­ல­மைச்­ச­ருக்­குப் பிரே­ரிக்­க­வுள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­த­னு­டன் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, இது தொடர்­பில் கட்சி இன்­ன­மும் எந்த முடி­வும் எடுக்­க­வில்லை என்று பதி­ல­ளித்­தார். கட்­சி­யின் செய­லா­ளர் ந.சிறீ­காந்­தா­வி­டம் கேட்­ட­போது, எமது கட்­சி­யின் முடிவு மாற­லாம். (மின்­ம­ட­லில் விந்­த­னின் பெயர் குறிப்­பிட்­டுள்­ளதே என்று கேட்­ட­தற்கு) நாம் முத­ல­மைச்­ச­ரி­டம் இன்று பெயர் பரிந்­து­ரைத்த பின்­னர்­தான் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யி­டு­வோம் – என்­றார்.