ஞாயிறு, ஜூலை 16, 2017

தனித்து ஆட்சியமைக்க ஐதேக தயாராம்!

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் வெளியேறினால், ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்த அரசாங்கத்தை உருவாக்க நாம் தயாராக உள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை அமைப்பது எமக்கு சாதாரண விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தேசிய அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு சரார் அரசாங்கத்தை விட்டு வெளியேறவுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையில் தேசியப் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.