புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஜூலை 08, 2017

பூஜாவை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு வரும் இலங்கை நடிகை மிதுனா

‘நான் கடவுள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பூஜா இலங்கையை சேர்ந்த
வர். அவரைத் தொடர்ந்து ‘ஓவியா’
என்ற படம் மூலம் தமிழில் நடிக்க வருகிறார் இலங்கை நடிகை மிதுனா. இதுபற்றி பட இயக்குனர் கஜன் சண்முகநாதன் கூறும்போது,’புரிதல் இல்லாத பெற்றோர்கள் தங்களது சண்டையால் பிள்ளைகளை கவனிக்க மறந்துவிடுகின்றனர். அதுபோல் கவனிப்பில்லாமல் இறந்த ஒரு குழந்தை பேயாகிறது. அது பெற்றோர்களுக்கு பாடம் புகட்டுகிறதா என்பதை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

யதார்த்தமான தோற்றத்துடன் கூடியவர்கள் நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். காண்டீபன் ஹீரோ. இலங்கை நடிகை மிதுனா ஹீரோயின். சுவிக்சா ஜெயரத்னம் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நிஷாந்தன், விபின் சந்திரன் ஒளிப்பதிவு. பத்மஜன் இசை. காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பு. கேரளாவின் மலை சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார்.