சனி, ஜூலை 15, 2017

தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை! - யாஸ்மீன் சூகா


இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை செய்யப்படுவதாக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 30 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இராணுவ முகாம்களில் சித்திரவதைகள், குடிவரவு மோசடிகள், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இது வரையில் தண்டிக்கப்படவில்லை. தமிழர்களை சித்திரவதை செய்வது ஓர் வருமானம் தரும் வர்த்தக முயற்சியாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.