வெள்ளி, ஜூலை 21, 2017

ஓ.பன்னீர்செல்வம் அணியின் முதல் விக்கெட்! அறிவித்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ

கடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்!’

சினம் குறையாத சித்திரப் புலி!
பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்தபோது முதல் ஆளாகப்போய் அவருடன் இணைந்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி இப்போது எடப்பாடி அணிக்கு வர இருக்கிறார் என்ற தகவல் அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் வரும் 24-ம் தேதி நடக்க இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான அடிக்கல்நாட்டு விழா இன்று கொடிசியா மைதானத்தில் நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கியமானவராக அறியப்பட்ட எம்.எல்.ஏ ஆறுக்குட்டி அந்த நிகழ்வுக்கு செல்லாமல் தன்னுடைய வீட்டில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிலிருந்தே அவர் நாளை பல்லடத்தில் எடப்பாடி அணியினர் நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணையப்போகிறார் என்று தகவல் கசிந்தது.

இது தொடர்பாக ஆறுக்குட்டி ஆதரவாளர்களிடம் பேசினோம், "சட்டசபையில் கோவைக்கு பல திட்டங்களை அறிவித்தார்கள். அதற்கு முதல்வர் அணியைப் பாராட்டி ஆறுக்குட்டி அண்ணன் பேசினார். அது பன்னீர்செல்வம் அணியினருக்குப் பிடிக்கவில்லை. அதன்பிறகு, அவரை ஒதுக்க ஆரம்பித்தார்கள். கோவையில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஆறுக்குட்டி அண்ணனுக்கு அழைப்பு இல்லை. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவது ஒன்றுதான் அண்ணனுடைய குறிக்கோள். அணி அரசியலில் எல்லாம் அவருக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. ஜெயலலிதா மக்களுக்கு என்னென்ன செய்ய நினைத்தாரோ அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வனே செய்கிறார். வேறென்ன வேண்டும். அதற்குத்தானே மக்கள் ஓட்டுப்போட்டார்கள். ஆறுக்குட்டி அண்ணன் சீக்கிரமே முதல்வர் எடப்பாடி அணியில் இணைவார்'' என்றனர்.