கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்.. தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம் ,,விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான குறித்த சிவப்பு அறிக்கைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக,உதயங்க வீரதுங்க,, பூகோள அரசியல் போட்டியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார் சம்பந்தன்! 70

சனி, ஜூலை 15, 2017

மயிலிட்டி காச நோய் மருத்துவமனையை விடுவிக்க பேச்சு!

வலி.வடக்கு, மயி­லிட்­டி­யில் இயங்கி வந்த காச நோயா­ளர்­க­ளுக்­கான வைத்­தி­ய­சா­லைக் காணி­யில் இரா­ணு­வம் சொகுசு விடு­தி­களை
அமைத்­துள்­ள­து. அதை தற்­பொ­ழு­தும் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் இராணுவம் வைத்துள்ளது. அந்தக் காணி விடு­விப்­பது தொடர்­பில் இரா­ணு­வத்­தி­ன­ரு­டன் பேச்சு நடத்தப்படுகின்றது என்று சுகா­தா­ரத் திணைக்­கள அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் காச நோயா­ளர்­க­ளுக்குச் சிகிச்சை வழங்­கு­வ­தற்காகப் பிரத்­தி­யேக வைத்­தி­ய­சாலை ஆரம்­பிக்­கப்­பட்டு அங்கு காச நோயா­ளர்­கள் போருக்கு முன்னர் சிகிச்சை பெற்­று­ வந்­த­னர். உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக வலி.வடக்கில் பல ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்­கர் நிலப்­ப­கு­ தியை இரா­ணு­வத்­தி­னர் கைய­கப்­ப­டுத்­தி­னர்.
அந்தக் காணி­கள் கட்­டம்­கட்­ட­மாக விடு­விக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. மயி­லிட்­டிப் பகுதி அண்­மை­யில் விடு­ விக்­கப்­பட்­டது. எனினும் அந்த இடத்­தி­லுள்ள காச­நோ­யா­ளர்­க­ளுக்­குச் சிகிச்சை வழங்­கும் வைத்­தி­ய­சாலை இடித்­துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.
வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த இடத்­தில் தற்­போது இரா­ணு­வத்­தி­ன­ரின் டாங்கி படைப் பிரி­வி­ன­ரின் விசா­ல­மான ஒய்வு விடுதி அமைக்­கப்­பட்­டுள்­ள­து என்று தெரிவிக்கப்படுகின்றது.
“காச­நோ­யா­ளர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கும் வைத்­தி­ய­சா­லைக் காணியை இரா­ணு­வம் விடு­விக்க வேண்­டும். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளைச் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சுக்­கள் முன்­னெ­டுக்க வேண்­டும்” என்று பல தரப்­பி­ன­ரும் கோரு­கின்­ற­னர்.
“மயி­லிட்டி காச­நோய் வைத்­தி­ய­சாலை இயங்­கிய காலத்­தில் நிர்­வா­கப் பணி­கள் கொழும்பு அர­சின் கீழ் முன்னெ டுக்கப்பட்டன.அண்­மை­யில் மயி­லிட்­டிப் பிர­தே­சம் இரா­ணு­வத்­தி­ன­ரால் விடு­விக்­கப்­பட்ட போதி­லும் வைத்­தி­ய­சா­லைக் காணி விடு­விக்­கப்­ப­ட­ வில்லை.இது தொடர்­பில் இரா­ணு­வத்­தி­ன­ரு­டன் பேசிக் காணியை விடு­விப்­பது தொடர்­பில் முயற்­சி­களை எடுத்­துள்­ளோம். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­ருக்­கும் இது தொடர்­பில் தெரி­வித்­துள்­ளோம்” என்று யாழ்ப்­பா­ணப் பிராந்­திய சுகா­தார சேவை­கள் திணைக்­கள அதி­ கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.