புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஜூலை 09, 2017

ன்னாரில் தேவாலயம் மீது தாக்குதல்! - பதற்றத்தினால் பொலிஸ் குவிப்பு

மன்னார் – கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் கற்களை வீசித் தாக்கியதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை அருட்தந்தை இ.செபமாலை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன்போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது.
மன்னார் – கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் கற்களை வீசித் தாக்கியதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை அருட்தந்தை இ.செபமாலை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன்போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது.

பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக கரிசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். சம்பவத்தை அடுத்து மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்றனர். மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.