ஞாயிறு, ஜூலை 23, 2017

இந்தியாமயிரிழையில் பரிதாப தோல்வி இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து மகளிர் அணி

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு நிலையான தொடக்கம் கிடைத்தது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் பறிக்கொடுத்து விழுந்தது. இதனால் ரன் குவிப்பில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டாலும், பிரான் வில்சன் மற்றும் டெய்லர் பார்ட்னர் ஷிப் அந்த அணிக்கு கைக்கொடுத்தது.

இந்திய மகளிர் அணி


இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. பிரான் வில்சன் 51, டெய்லர் 45 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ஜுலன் கோஸ்வாமி மூன்று விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பூனம் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பூனம் ராவுட், ஹர்மன்ப்ரீத் கௌர் சிறப்பாக பேட் செய்தனர். பூனம், 86, ஹர்மன் 51 ரன்கள் எடுத்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதைத் தொடர்ந்து 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் அன்யா ஷர்பூல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 4-வது முறை உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து மகளிர் அணி