ஞாயிறு, ஜூலை 23, 2017

சுடப்பாவித்த துப்பாக்கியும் மகசீனும் மீட்பு

நல்லூரில் நேற்று மாலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப்
பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பிஸ்டல் நல்லூர் ஆலய வீதியில் உடனடியாகவே மீட்கப்பட்டது. அதனை தடயவியல் துறை அதிகாரிகள் பரிசோதித்த போது, அதனுள் மகசின் இருக்கவில்லை.
நல்லூரில் நேற்று மாலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தி விட்டு துப்பாக்கிதாரி போட்டு விட்டு சென்ற கைத்துப்பாக்கியின் மகசீன் நேற்று இரவு 11 மணியளவில் தடயவியல் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றில் இருந்து குறித்த துப்பாக்கியின் வெற்று மகசீன் மீட்கப்பட்டுள்ளது.